×

உக்ரைன் எல்லைக்கு அருகில் ரஷ்ய கடற்படை ஜெனரல் பலி

மாஸ்கோ: ரஷ்ய கடற்படையின் துணைத் தலைவரான மேஜர் ஜெனரல் மிகைல் குட்கோவ், உக்ரைனின் சுமி பிராந்தியத்தின் எல்லையான மேற்கு குர்ஸ்க் பகுதிக்கு சென்ற போது உக்ரைன் தாக்குதலில் பலியானார். ரஷ்ய கூட்டமைப்பின் ஹீரோ என்ற மிக உயர்ந்த பட்டத்தால் அலங்கரிக்கப்பட்ட குட்கோவ், மார்ச் மாதம் கடற்படைத் தளபதியின் துணைத் தலைவராக பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு, 155வது மரைன் படைப்பிரிவின் தளபதியாக இருந்தார்.
ஜெனரல் குட்கோவ் தனது படைகளை முன்னணியில் பார்வையிட்டபோது கொல்லப்பட்டார் என்று குர்ஸ்க் பிராந்திய ஆளுநர் அலெக்சாண்டர் கின்ஷ்டீன் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான போரில் இதுவரை ரஷ்யாவின் 10 ஜெனரல்கள் கொல்லப்பட்டதாக மாஸ்கோ உறுதிப்படுத்தியுள்ளது.

The post உக்ரைன் எல்லைக்கு அருகில் ரஷ்ய கடற்படை ஜெனரல் பலி appeared first on Dinakaran.

Tags : Russian Navy ,Ukrainian ,Moscow ,Major General ,Mikhail Gudkov ,West Kursk ,Ukraine ,Sumy region ,Gudkov ,Russian Federation ,Dinakaran ,
× RELATED சிறையில் இருக்கும் பாகிஸ்தான்...