×

ஆசை வலையில் வீழ்த்தி அரசு அதிகாரி உட்பட பலரிடம் தவெக பெண் பிரமுகர் உல்லாசம்: வீடியோ எடுத்து பல லட்சம் கேட்டு மிரட்டியதால் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அரசு அதிகாரி உள்பட பலருடன் உல்லாசம் அனுபவித்ததை வீடியோ எடுத்து, லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டிய தவெக பெண் பிரமுகரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் அருகே சின்ன அய்யங்குளத்தை சேர்ந்தவர் ரீட்டா (48). தமிழக வெற்றி கழக உறுப்பினரான இவர், அக்கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்துள்ளார். இவர், திண்டுக்கல்லை சேர்ந்த 57 வயது அரசு பொதுப்பணித்துறை பொறியாளரிடம் தகாத உறவில் இருந்ததாகவும், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. உல்லாசமாக இருந்ததை வீடியோவாக பதிவு செய்த ரீட்டா, அரசு பொறியாளரிடம் அதை காட்டி அடிக்கடி பணம் பறித்துள்ளார்.

மேலும், லட்சக்கணக்கில் பணம் கேட்டதாகவும், தராவிட்டால் அந்தரங்க வீடியோவை குடும்பத்தினருக்கு அனுப்பி விடுவேன் என அரசு பொறியாளரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. பொறியாளர் இதுகுறித்து தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ரீட்டாவை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். போலீசார் விசாரணையில், அரசு பொறியாளரிடம் ஆபாச வீடியோவைக் காட்டி பணம் பறித்ததை ரீட்டா ஒப்புக் கொண்டார். இதேபோல் மேலும் பலரிடம் பழகி ஆபாச வீடியோ எடுத்து பணம் பறித்ததும் தெரியவந்துள்ளது. மேலும், அவரிடமிருந்து ரூ.30 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார், ரீட்டாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நிலக்கோட்டையில் உள்ள பெண்கள் சிறையில் அடைத்தனர். தவெக பெண் உறுப்பினர் ஆண்களை வலையில் வீழ்த்தி உல்லாசமாக இருந்து ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஆசை வலையில் வீழ்த்தி அரசு அதிகாரி உட்பட பலரிடம் தவெக பெண் பிரமுகர் உல்லாசம்: வீடியோ எடுத்து பல லட்சம் கேட்டு மிரட்டியதால் கைது appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Rita ,Chinna Ayyankulam ,Tamil Nadu Victory Party… ,
× RELATED சென்னை பல்லாவரத்தில் யூடியூபர்...