×

இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து 4 பேர் பலி


ஜகார்த்தா: இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே 65 பேருடன் சென்ற படகு கடலில் மூழ்கியது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 23 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. கிழக்கு ஜாவாவில் உள்ள கெட்டபாங் துறைமுகத்தில் இருந்து இந்தோனேசியாவின் பாலியில் உள்ள கிலிமான் துறைமுகத்துக்கு கே.எம்.பி. துனு பிரதாமா ஜெயா என்ற கப்பல் நேற்றிரவு புறப்பட்டது. இதில் 53 பயணிகள், 12 பணியாளர்கள் பயணித்தனர். மேலும் 14 லாரிகள் உட்பட 22 வாகனங்களும் இந்த படகில் இருந்தன. சுமார் 50 கிலோமீட்டர் தூரம் படகு பயணித்த நிலையில் திடீரென அந்த படகு தண்ணீரில் மூழ்கி கவிழ்ந்தது. கப்பலில் பயணித்த அனைவரும் அலறி துடித்தனர்.

தகவலறிந்து தேசிய தேடல் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இழுவை படகுகள் மற்றும் சிறிய அளவிலான கப்பல்கள் உட்பட 9 படகுகள் இந்த தேடல் பணியில் ஈடுபட்டுள்ளன. அவைகள் நேற்றிரவு முதல் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதுவரையில் 4 உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர். 23 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களில் பலர் மயங்கிய நிலையில் இருந்தனர். மீதமுள்ளவர்களை ேதடும் பணி நடந்து வருகிறது. மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள குழுக்கள் கடினமான சூழ்நிலைகளில் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

The post இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து 4 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Indonesia ,Jakarta ,Bali ,
× RELATED சிறையில் இருக்கும் பாகிஸ்தான்...