×

தொழில் செய்வதாக கூறி உறவினரிடம் ரூ.5 லட்சம் ஏமாற்றியவர் மீது வழக்கு

பெரம்பூர் : கொடுங்கையூர் திருவள்ளுவர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் அன்சர் அலி (43), இவர் சொந்தமாக பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார். இவரது உறவினரான ரியாஸ் அகமது என்பவர் அன்சர் அலியிடம் அலுமினியம் பேப்ரிகேஷன் தொழில் செய்தால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் எனகூறி, அதில் முதலீடு செய்யுமாறு கூறி கடந்த வருடம் நவம்பரில் ரூ.5 லட்சம் கேட்டுள்ளார். அன்சர் அலியும் லாபம் கிடைக்கும் என நம்பி பணத்தை கொடுத்துள்ளார். அதன்பிறகு நீண்ட நாட்கள் வரை ரியாஸ் அகமது எந்த ஒரு பணத்தையும் திருப்பித் தரவில்லை என கூறப்படுகிறது. பலமுறை பணம் கேட்டும் திருப்பி கொடுக்காததால் அன்சர் அலி கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அகமது மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

The post தொழில் செய்வதாக கூறி உறவினரிடம் ரூ.5 லட்சம் ஏமாற்றியவர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Perambur ,Ansar Ali ,Thiruvalluvar Salai ,Kodungaiyur ,Riyaz Ahmed ,Dinakaran ,
× RELATED கனமழை காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.13.35 கோடி ஒதுக்கீடு