விபத்தை ஏற்படுத்திய ஜீப்பில் 400கிலோ குட்கா பறிமுதல்

சேலம், ஜூலை 3: சேலம் அருகே தனியார் பள்ளி வாகனம் மீது மோதி, விபத்தை ஏற்படுத்திய ஜீப்பில் இருந்து 400 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். சேலம் வலசையூர் மெயின்ரோட்டில், நேற்று மாலை தனியார் பள்ளி வாகனம் சென்றது. அப்போது அந்த வழியாக எதிரே வேகமாக வந்த ஜீப், தனியார் பள்ளி வாகனம் மீது மோதியது. இதில், பள்ளி வாகனம் சேதமடைந்தது.

உடனே ஜீப்பில் இருந்து டிரைவர் இறங்கி தப்பியோடி விட்டார். விபத்து குறித்து தகவலறிந்த காரிப்பட்டி போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விாரணை மேற்கொண்டனர். விபத்தை ஏற்படுத்தி ஜீப்பின் கதவை திறந்து பார்த்த போலீசார், அதற்குள் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வந்தது தெரியவந்தது. ஜீப்புடன் 400 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், குட்காவை கடத்தி வந்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர். குட்காவை பெங்களூரில் இருந்து கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post விபத்தை ஏற்படுத்திய ஜீப்பில் 400கிலோ குட்கா பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: