×

ஈரோடு பாரதிதாசன் கல்லூரியில் யோகா நிகழ்ச்சி

ஈரோடு, ஜூலை 3: ஈரோடு அருகே எல்லிஸ் பேட்டையில் உள்ள பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி தாளாளர் என்.கே.கே. பெரியசாமி தலைமை தாங்கினார். செயலாளர் மற்றும் இணை செயலாளர்கள், நிர்வாக அலுவலர், துணை முதல்வர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் வானதி தொடக்க உரையாற்றினார். இதில் கோவை ஹதா யோகா சங்கத்தின் பயிற்சியாளர் சஞ்சய் வரதன் மாணவ- மாணவிகளுக்கு யோகாவின் நன்மைகள் குறித்து விளக்க உரை ஆற்றினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை யோகா மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி செய்திருந்தார்.

 

The post ஈரோடு பாரதிதாசன் கல்லூரியில் யோகா நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Bharathidasan College ,Erode ,Bharathidasan Arts and Science College ,Ellis Pettah ,N.K.K. Periyasamy ,
× RELATED விதை உற்பத்தி திட்டம் குறித்து...