ஜெயங்கொண்டம், ஜூலை 2: ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆண்டிமடம் ஒன்றியத்தில் தூய்மை இந்தியா இயக்கம் 2.0 திரவக்கழிவு மேலாண்மை திட்டம் 2024-25 திட்டத்தின் கீழ், ரூ.7.60 கோடி மதிப்பீட்டில் கசடு கழிவு மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணியை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் வரதராஜன்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் முகமது ரபீக், பேரூராட்சி தலைவர் மார்கிரேட் அல்போன்ஸ், ஆண்டிமடம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ரெங்க முருகன், பேரூர் கழக செயலாளர் அல்போன்ஸ் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் ரூ.7.60 கோடியில் நீர் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகள் appeared first on Dinakaran.
