- அமைச்சர் ஏ.
- வேலு
- அரசு பள்ளி
- திருவண்ணாமலை
- அமைச்சர் ஏ. வாருங்கள்
- திருவண்ணாமலை யூனியன்
- அரசு மேல்நிலைப்பள்ளி
- கட்டம்புண்டி கிராமம்
திருவண்ணாமலை, ஜூலை 2: திருவண்ணாமலை அடுத்த காட்டாம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், ரூ.1.28 கோடியில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். திருவண்ணாமலை ஒன்றியம், காட்டாம்பூண்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ1.28 கோடியில் புதியதாக 6 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. தரை தளம் மற்றும் முதல் தளம் என மொத்தம் 2484 சதுர அடி பரப்பளவில் இக்கட்டிடம் அமைந்திருக்கிறது. இந்நிலையில், கூடுதல் வகுப்பறை கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார். முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் முன்னிலை வகித்தார். விழாவில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு, புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார். மேலும், பள்ளியின் பொதுத்தேர்வு ேதர்ச்சி சதவீதம், மாணவர்களில் கற்றல் திறன், பள்ளி உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்தார். புதிய வகுப்பறைகள் கட்டி கொடுத்ததற்கு, மாணவர்கள் நன்றி தெரிவித்தனர். விழாவில், மாநில தடகளச்சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ், முன்னாள் நகராட்சித் தலைவர் இரா.தரன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கண்ணன், எஸ்.பன்னீர்செல்வம், பிரியா விஜயரங்கன், மெய்யூர் சந்திரன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் ரமணன், கலைமணி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உள்ளிட்ட உள்பட பலர் கலந்துகொண்டனர்.
The post ரூ.1.28 கோடியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார் திருவண்ணாமலை அருகே அரசு பள்ளியில் appeared first on Dinakaran.
