உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோயிலில் உதங்க மகரிஷி உற்சவ விழா

 

திருச்சி, ஜூன் 30: திருச்சி, உறையூர் பகுதியில் உள்ள காந்திமதி, பஞ்சவர்ண சுவாமி கோயிலில் எழுந்தருளி உள்ள  உதங்க மகரிஷியின் 19வது உற்சவ விழா நேற்று நடந்தது.
உறையூர், காந்திமதி, பஞ்சவர்ண சுவாமி கோயிலில் எழுந்தருளியுள்ள உதங்க மகரிஷி 19ம் ஆண்டு உற்சவ விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு முக்கனிகளான மா, பலா, வாழை போன்ற பழங்கலாள் அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து உதங்க மகரிஷிக்கு 21 வகை அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.
உற்சவத்தில் பல நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் மற்றும் கோயில் பணியாட்கள் செய்திருந்தனர்.

The post உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோயிலில் உதங்க மகரிஷி உற்சவ விழா appeared first on Dinakaran.

Related Stories: