×

பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கயம் இன மாடுகள் ரூ.11.50 லட்சத்துக்கு விற்பனை

 

காங்கயம், ஜூன்30: காங்கயம் அடுத்துள்ள நத்தக்காடையூர் அருகே பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கயம் இன மாடுகள் ரூ.11.50 லட்சத்திற்கு விற்பனையானது. காங்கயம் தாலூக்கா, நத்தக்காடையூர் பழையகோட்டையில் காங்கயம் இன மாடுகளுக்கான சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் மாடுகளை விற்கும் விவசாயிகளும் வாங்கும் விவசாயியும் நேரடியாக விலை நிர்ணயித்து கொள்வது தனி சிறப்பு.

நேற்று 43 கால்நடைகள் வந்திருந்தன. இதில் காங்கயம் இன மாடுகள் ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.79 ஆயிரம் வரை விற்றது. பசுங்கன்றுகள் ரூ.10ஆயிரம் முதல் ரூ.40ஆயிரம் வரை விற்பனையானது, காளை கன்றுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை விற்கப்பட்டது. நேற்று நடைபெற்ற சந்தையில் 26 கால்நடைகள் ரூ.11 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனை நடைபெற்றதாக சந்தை மேற்பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

The post பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கயம் இன மாடுகள் ரூ.11.50 லட்சத்துக்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Palayakottai ,Kangayam ,Nathakadaiyaur ,Palayakottai, Nathakadaiyaur ,Kangayam taluka ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...