×

10.18 லட்சத்தில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மொபட் எம்பி, எம்எல்ஏ வழங்கினர்

 

வந்தவாசி, ஜூன் 27: வந்தவாசியில் நடந்த சிறப்பு முகாமில் ரூ.10.18 லட்சம் மதிப்பில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மொபட்டை எம்பி, எம்எல்ஏ ஆகியோர் வழங்கினர்.

வந்தவாசி வட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. மாற்றுத்திறனாளிகள் மாவட்ட நல அலுவலர் செந்தில்குமாரி தலைமை தாங்கினார். குழந்தைகள் நல மருத்துவர் பிரசன்ன தீபா மற்றும் மருத்துவக்குழுவினர் முகாமிற்கு வந்த மாற்றுத்திறனாளிகளின் பாதிப்பு சதவீதம் குறித்து பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்கினர். ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10.18 லட்சம் மதிப்பிலான இலவச மொபட்டை வழங்கினர்.

 

The post 10.18 லட்சத்தில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மொபட் எம்பி, எம்எல்ஏ வழங்கினர் appeared first on Dinakaran.

Tags : MLA ,Vandavasi ,Dinakaran ,
× RELATED மானுடத்தை நேசித்தவர் மகாகவி பாரதி...