×

ராணுவ தளவாடம் அமைக்க அதிகாரிகள் ஹெலிகாப்டரில் ஆய்வு தண்டராம்பட்டு எடத்தனூர்-திருவடத்தனூர் பகுதியில்

 

தண்டராம்பட்டு, ஜூன் 27: தண்டராம்பட்டு எடத்தனூர்-திருவடத்தனூர் பகுதியில் ராணுவ தளவாடம் அமைக்க அதிகாரிகள் ஹெலிகாப்டரில் ஆய்வு செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த திருவடத்தனூர் எடத்தனூர் பகுதியில் நேற்று காலை 9.40 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் 2 ஹெலிகாப்டர்கள் பறந்தது. எடத்தனூர் கிராமத்தில் 100 அடி உயரத்தில் மூன்று சுற்றுகள் சுற்றி வந்து மேலே சென்றது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது: எடத்தனூர் திருவடத்தனூர் பகுதியில் ராணுவ தளவாடம் அமைப்பதற்கு உண்டான சாத்தியக்கூறு உள்ளதாக சேட்லைட் மூலம் கண்டறிந்துள்ளனர். இவற்றை டெல்லியில் இருந்து ராணுவ அதிகாரிகள் ஹெலிகாப்டரில் ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 4 ஹெலிகாப்டரில் ராணுவ அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
அதேபோல் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் காரில் வந்து ஆய்வு செய்தனர். ராணுவ ஹெலிகாப்டரில் இருந்து அதிகாரிகள் பார்த்தனர். பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் என்றனர்.

The post ராணுவ தளவாடம் அமைக்க அதிகாரிகள் ஹெலிகாப்டரில் ஆய்வு தண்டராம்பட்டு எடத்தனூர்-திருவடத்தனூர் பகுதியில் appeared first on Dinakaran.

Tags : Edathannur-Thiruvadathanur area ,Thandarambattu ,Edathannur-Thiruvadathanur ,Edathannur ,Thiruvadthanur ,Tiruvannamalai ,
× RELATED மானுடத்தை நேசித்தவர் மகாகவி பாரதி...