×

மின்கம்பத்தில் பைக் மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழப்பு

 

பாலக்காடு, ஜூன் 27: கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே பைக் மின் கம்பத்தில் மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். பாலக்காடு மாவட்டம் சித்தூர் தேவாங்கபுரம் ஜெயசேகரனின் மகன் ஜோதி ராதித்யா (20). மரைன் இன்ஜினீரிங் படிப்பு முடித்து கொச்சியில் மர்சென்ட் நேவி நேர்முக தேர்வுக்காக தனது மாமா சஜினுடன் பைக்கில் நேற்று சென்றுள்ளார். அந்த பைக்கை ஜோதி ராதித்யா ஓட்டி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கமாலி அருகே பைக் நிலை தடுமாறி சாலையோரம் நின்ற மின் கம்பத்தில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் ஜோதி ராதித்யா தலையில் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து, சஜின் (40) பலத்த காயங்களுடன் அங்கமாலியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்துக்குறித்து அங்கமாலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மின்கம்பத்தில் பைக் மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Palakkad ,Angamaly ,Ernakulam district of ,Kerala ,Jyothi Raditya ,Devangapuram ,Jayasekaran ,Chittoor, Palakkad district ,
× RELATED குன்னூர் சிம்ஸ் பூங்கா பழப்பண்ணையில் 3...