நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையை அரசியலாக்காதீர்கள்: காங்கிரஸ் கருத்து

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் காங்கிரஸ் பொறுப்பாளரும், மூத்த தலைவருமான சச்சின் பைலட் ராய்ப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மழைக்காலத்திலும் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கை தொடரும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சச்சின் பைலன், ‘‘காங்கிரஸ் எப்போதும் வன்முறை மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிரானது.

இந்த நாட்டையும், மாநிலத்தையும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு எங்கள் தலைவர்கள் தங்களது உயிரை தியாகம் செய்துள்ளனர். எந்த பயனுள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமோ, அதனை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கை வெளிப்படையான முறையில் செய்யப்பட வேண்டும். இதனை அரசியலாக்கக் கூடாது. இது உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான விஷயமாகும். இதில் யாரும் அரசியல் செய்யக்கூடாது” என்றார்.

 

The post நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையை அரசியலாக்காதீர்கள்: காங்கிரஸ் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: