2 தொகுதி இடைத்தேர்தலில் தோல்வி குஜராத் காங்கிரஸ் தலைவர் ராஜினாமா

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் காடி மற்றும் விசாவதார் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. அதிலும் குறிப்பாக விசாவதார் தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு 3வது இடமே கிடைத்தது. இதையடுத்து தோல்விக்கு பொறுப்பு ஏற்று காங்கிரஸ் மாநில தலைவர் சக்திசிங் கோஹில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அவர் கூறுகையில்,’இடைத்தேர்தல் முடிவுகள் எங்கள் எதிர்பார்ப்புகளின்படி இல்லாததால், தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று குஜராத் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். எனது ராஜினாமா கடிதத்தை எங்கள் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பியுள்ளேன். புதிய தலைவரை நியமிக்கும் வரை, ஷைலேஷ் பர்மர் பொறுப்பு தலைவராக செயல்படுவார்’ என்றார்.

 

The post 2 தொகுதி இடைத்தேர்தலில் தோல்வி குஜராத் காங்கிரஸ் தலைவர் ராஜினாமா appeared first on Dinakaran.

Related Stories: