பிரதமர் மோடி முழக்கமிடும் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளார்; தீர்வு காண்பதில் அல்ல: ராகுல் காந்தி விமர்சனம்!

டெல்லி : வசனங்கள் பேசுவதில் மட்டுமே பிரதமர் மோடி வல்லவர்; தீர்வு காண்பதில் இல்லை என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது; உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்கும் ‘மேக் இன் இந்தியா’ திட்டம், இந்தியாவில் அதிக அளவில் தொழிற்சாலைகள் பெருகும் என்ற வாக்குறுதியை அளித்தது. ஆனால், இன்று நாட்டில் உற்பத்தி ஏன் குறைந்துள்ளது? வேலையின்மை ஏன் அதிகரித்துள்ளது? சீனாவிலிருந்து இறக்குமதிகள் ஏன் இரட்டிப்பாகியுள்ளன?

பிரதமர் மோடி முழக்கமிடும் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளார், ஆனால், தீர்வு காண்பதில் அல்ல. பொருளாதார ரீதியில் 2014 முதல் நமது உற்பத்தி 14 சதவீதமாக குறைந்துள்ளது. அரசு இறக்குமதியில்தான் ஆர்வம் காட்டுகிறது. உள்நாட்டு நிறுவனங்களை பெருக்குவதில் அல்ல. இறுக்குமதி அதிகரிப்பால் சீனா லாபம் அடைகிறது.

நேர்மையான சீர்திருத்தங்கள் மூலமும், நிதி உதவி அளிப்பதன் மூலமும் லட்சக்கணக்கான உற்பத்தியாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும் அடிப்படை மாற்றமே இந்தியாவுக்குத் தேவை. மற்றவர்களுக்கு ஒரு சந்தையாக இருப்பதை நாம் நிறுத்த வேண்டும்.

உடல் உழைப்பை நாம் மதிக்கத் தொடங்கும் வரை, தெருக்களில் நின்று மணிக்கணக்காக வேலையும், வியாபாரமும் செய்து வரும் மனிதர்களை நாம் மதிக்க மாட்டோம். மேலும் இதன் மையத்தில் ‘சாதி’ என்ற கருத்து உள்ளது. இதை நாம் வெளிப்படையாக கூற வேண்டும். இந்திய சமூகம் எவ்வாறு அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்கிறது, இந்திய சமூகம் எவ்வாறு மரியாதையை பகிர்ந்து கொள்கிறது என்பதை நாம் சரியாக புரிந்து வேண்டும். இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார்.

The post பிரதமர் மோடி முழக்கமிடும் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளார்; தீர்வு காண்பதில் அல்ல: ராகுல் காந்தி விமர்சனம்! appeared first on Dinakaran.

Related Stories: