தேர்தல் நெருங்கும் சமயம்கள் இறக்கும் போராட்டம் நடத்தி அரசியல் ஆதாயம் தேடும் சீமான்: எர்ணாவூர் நாராயணன் குற்றச்சாட்டு

சென்னை: சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தூத்துக்குடி மாவட்டம், பெரியதாழையில் நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பில் கள் தடையை நீக்க வலியுறுத்தி பனைமரத்திலிருந்து கள் இறக்கிய போராட்டம் நடந்தது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பனை மரத்தில் ஏறி கள் இறக்கி பொதுமக்களுக்கும் நிர்வாகிகளுக்கும் ஊற்றி கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு பனைமர தொழிலாளர்கள் வாரியம் சார்பாக ஒரு கோடி பனை விதைகள் விதைத்து உலக சாதனை பட்டியலில் இடம்பெற்றுள்ளோம்.

அதன் பிறகு இன்று தமிழக அரசு பனை தொழிலாளர்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் அறிவித்து அவர்கள் பயனடைந்து வருகிறார்கள். தேர்தல் நெருங்கும் சமயம் சீமான் அரசியல் ஆதாயம் தேடுகிறார். அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பனைமர தொழிலாளர்கள் நலனுக்காக அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் மீண்டும் பனை நல வாரியம் அமைத்து பனைத் தொழிலாளர்கள் பாதுகாவலராக தமிழக அரசு இன்று திகழ்ந்து வருகிறது.

 

The post தேர்தல் நெருங்கும் சமயம்கள் இறக்கும் போராட்டம் நடத்தி அரசியல் ஆதாயம் தேடும் சீமான்: எர்ணாவூர் நாராயணன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: