எனது பெயரில் ரூ.500 கோடி சொத்து இருப்பதாக பாண்டு பத்திரத்தில் பெற்றோர் என்னிடம் கையெழுத்து வாங்கினார்கள்: ஜெகன் மூர்த்திக்கு இதில் என்ன சம்பந்தம் என்று எனக்கு தெரியவில்லை

சென்னை: எனது பெயரில் ரூ.500 கோடி சொத்து இருக்கிறதா எனது பெற்றோர் என்னிடம் பாண்டு பத்திரத்தில் கையெழுத்து வாங்கி கொண்டனர். இந்த பிரச்னையில் ஜெகன் மூர்த்திக்கு என்ன சம்பந்தம் என்று எனக்கு தெரியவில்லை. தினமும் புதுசு புதுசா பிரச்னைகள் வருகிறது என காதல் திருமணம் செய்த விஜயா கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான காதலன் தனுஷை வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்ட விஜயா, திருமணத்துக்கு பிறகு அவரது பெற்றோரால் எதிர்கொண்டு வரும் பிரச்னைகள் குறித்து பேசியதாவது: என் பெயர் விஜயா, தேனி மாவட்டம். நான் பிஎஸ்சி அக்ரிகல்சர் படித்து கொண்டிருந்தேன். நானும் தனுஷும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். வீட்டில் தெரிந்துவிட்டது. இதனால் பிரச்னை ஆகிவிடுமோ என்று நான் விருப்பட்டு இவரை திருமணம் செய்து கொண்டேன். திருமணம் செய்த பிறகு எங்கள் பெற்றோருக்கு தெரிந்துவிட்டது. இதனால் என்னிடம் எல்லாம் எழுதி வாங்கி கொண்டாங்க. பாண்டு பத்திரத்தில் கூட எழுதி வாங்கி கொண்டார்கள். இப்போது புதுசு புதுசா பிரச்னை வருகிறது. எனது பெயரில் ரூ.500 கோடி சொத்து இருக்கிறதா சொல்றாங்க. ஆனால் எனது பெயரில் அப்படி இருக்கிற மாதிரி தெரியவில்லை. எனது பெற்றோரின் சொத்துக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. எனக்கு எதுவும் வேண்டாம்.

எதிர்காலத்தில் பிரச்னை வந்தால் நான் உங்களிடம் வரமாட்டேன் என்று எழுதி கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். போலீஸ் என்னிடம் 3 முறை வாக்குமூலம் பெற்றனர். திரும்ப இப்போ புதுசு புதுசா பிரச்னை வருகிறது. இதுக்கும் ஜெகன் மூர்த்திக்கும் என்ன சம்பந்தமும், என்ன லிங்க் என்று தெரியவில்லை. அவர் எப்படி புதுசா எங்கள் பிரச்னையில் உள்ளே வந்தார் என்று தெரியல. எங்களை நிம்மதியாக விட்டால் போதும். நான் படிக்கனும் என்றாலும் முடியல. என்னுடைய படிப்பு சான்றிதழ்களை வைத்து வேலைக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. இந்த பிரச்னையால் நாங்கள் 3 மாதமாக வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கிறோம். நாங்கள் எவ்வளவு நாட்கள் தான் இப்படி இருக்க முடியும். நாங்கள் அடுத்து எதிர்காலத்தில் வேலைக்கு போகனும், எனது பெற்றோரிடம் நானே பேசினேன். எதுவும் பன்னாதீங்க. நடந்தது நடந்து போச்சு. என்னிடம் சாதாரணமாகத்தான் பேசினார்கள். ஓகே நீ சென்றுவிட்டாய். நாங்கள் ஒரு வரவேற்பு நிகழ்ச்சி மட்டும் வைத்து கொள்கிறோம் என்று சொன்னார்கள். நீங்கள் வரவேற்பு வைப்பதாக இருந்தாலும் பரவாயில்லை.

திருமணம் கூட திரும்ப செய்து கொள்ளவும் விருப்பமாக இருக்கிறோம் என்று 3 வாரத்திற்கு முன்பு தான் சொன்னேன். நான் எனது பெற்றோரிடம் கேட்டேன். இனி ஏதாவது செய்வீர்களா என்று. அதற்கு நாங்கள் அப்படி எல்லாம் பண்ணமாட்டோம் டா. நீ தான் வரமாட்டேன் என்று சொல்லிட்டியே என்று சொன்னாங்க. என்னை பொருத்த வரை நாங்கள் இணக்கமாக போக வேண்டும். எனது அப்பா… எனக்கு அடுத்து எனது அண்ணா, எங்கள் அப்பாவை சார்ந்து தான் இருக்கிறார். என்னுடைய எதிர்காலம் இப்படி ஆகிவிட்டதே என்றாலும், எனது அண்ணன் எதிர்காலம் நல்லா இருக்கனும்… அவங்களும் படித்துக் கொண்டு இருக்கிறார்கள். திருணத்திற்கு எல்லா பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவிப்பது இயல்புதான். நாங்கள் வீட்டில் மாட்டிக்கொண்ேடாம். அந்த ஒரு விஷயத்தினால் நான் வீட்ைடவிட்டு வெளியே வந்துவிட்டேன். சிறுவனை கடத்திய பிரச்னைக்கு பிறகு யாரும் என்னிடம் எனது வீட்டில் இருந்து பேசவில்லை. நாங்கள் எப்படி காதலித்தோம். நான் எப்படி அங்கிருந்து வந்தேன். எத்தனை நாட்கள் பழகினோம் என்று போலீசார் கேட்டார்கள். இதோடு நாங்கள் 4 முறை எழுதி கொடுத்துள்ளோம். ஏன் எங்களிடம் இப்படி திரும்ப திரும்ப வாக்குமூலம் கேட்டு கொண்டு இருக்காங்க என்று தெரியவில்லை. இவ்வாறு விஜயா தெரிவித்துள்ளார்.

 

The post எனது பெயரில் ரூ.500 கோடி சொத்து இருப்பதாக பாண்டு பத்திரத்தில் பெற்றோர் என்னிடம் கையெழுத்து வாங்கினார்கள்: ஜெகன் மூர்த்திக்கு இதில் என்ன சம்பந்தம் என்று எனக்கு தெரியவில்லை appeared first on Dinakaran.

Related Stories: