சிறப்பு விருந்தினராக பாமக தலைவர் அன்புமணி பங்கேற்று பேசியதாவது: நான் அமைதியாக இருப்பது பலவீனம் அல்ல, அதுதான் என்னுடைய பலம். இந்த பிரச்னைக்கு நானும், அய்யாவோ காரணம் கிடையாது. ஒரு சிலர் நம் கட்சியிலேயே அந்த சூழ்ச்சிக்கு துணை போகிறார்கள். யார் யார் என்பது விரைவில் தெரியவரும். என்னுடைய கட்சிக்கும் என்னுடைய சமுதாயத்திற்கும், நான் துரோகம் செய்தால் அதுதான் என்னுடைய வாழ்நாளில் கடைசி நாளாக இருக்கும்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, ஒரு பெண் சாலையில் நடந்த செல்ல முடியுதா? புதிய பசுமை விமான நிலையம் பரந்தூரில் தான் அமைக்க வேண்டும் என அரசு பிடிவாதமாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, மாநில இளைஞரணி செயலாளர் பொன்.கங்காதரன், முன்னாள் எம்எல்ஏ சக்தி கமலம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு புதிய மருத்துவக் கல்லூரி மற்றும் புதிய சட்டக் கல்லூரி கொண்டு வர வேண்டும், பரந்தூர் விமான நிலையத்தை மக்கள் ஏற்கவில்லை என்றால் செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அருகே உள்ள தரிசு நிலத்தில் அமைக்க வேண்டும்என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post நான் அமைதியா இருக்கிறது என் வீக்னஸ் இல்ல: அன்புமணி ஆவேசம் appeared first on Dinakaran.