இந்த வரிசையில் தற்போது புதிய செல்போன் நிறுவனத்தை தொடங்க இருப்பதாக டிரம்ப் குடும்பம் அறிவித்துள்ளது. டிரம்ப் குழுமத்தின் வணிகங்களை டிரம்பின் மகன்களில் ஒருவரான எரிக் டிரம்ப் கவனித்துக் கொள்கிறார்.
இந்த புதிய செல்போன் நிறுவனத்தின் தயாரிப்புகள் வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான முன்பதிவு ஆர்டர்களும் இணையதளம் மூலமாக வரவேற்கப்பட்டுள்ளது. டிரம்பின் நிறுவனம் தயாரிக்க உள்ள ஸ்மார்ட்போனுக்கு டி1 என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த போன் 499 டாலரில் (சுமார் ரூ.42,000) கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த செல்போன் தங்க நிறத்தில் ஜொலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட இருக்கிறது. உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் தனது பெரும்பான்மையான ஐபோன் தயாரிப்புகளை இந்தியாவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்தியாவில் பெரிய அளவில் ஆப்பிள் நிறுவனம் முதலீடு செய்ய இருக்கிறது. இந்தியாவின் ஐப்பிள் ஐபோன் தயாரிப்பின் முக்கிய ஆலை சென்னையில் அமைந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த திட்டத்தை விமர்சித்த டிரம்ப், சொந்த நாட்டில் உற்பத்தி செய்யப்படாத செல்போன்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என மிரட்டி உள்ளார். இந்த சூழலில் டிரம்ப் குடும்பம் ஸ்மார்ட்போன் உற்பத்தி தொழிலில் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.
* மாதம் ரூ.4 ஆயிரத்தில் எல்லாம் அன்லிமிடெட்
ஸ்மார்ட்போன் உற்பத்தி தவிர, செல்போன் சேவையையும் டிரம்ப் நிறுவனம் வழங்க இருப்பதாக அதன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் 45வது மற்றும் 47வது அதிபராக டிரம்ப் இருந்திருப்பதால், 47.45 டாலரில் செல்போன் சேவை வழங்கப்பட உள்ளது. இந்திய மதிப்பில் சுமார் ரூ.4 ஆயிரத்தில் அழைப்புகள், டேட்டா, சர்வதேச அழைப்புகள் எல்லாமே அன்லிமிடெட்டாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The post புதிய செல்போன் நிறுவனம் தொடங்கும் டிரம்ப் குடும்பம்: மலிவான விலையில் தர திட்டம் appeared first on Dinakaran.