நெதர்லாந்தில் நடந்த லிபெமா ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கேப்ரியல் டியாலோ (கனடா) 11 இடங்கள் உயர்ந்து 44வது இடத்தை பிடத்துள்ளார். டபிள்யூடிஏ தரவரிசையில் ஜெர்மனி வீராங்கனை டாட்ஜனா மரியா 43 இடங்கள் முன்னேறி 43வது இடத்தை பிடித்துள்ளார். காரணம் இங்கிலாந்தில் நடந்த குவீன்ஸ் கிளப் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதுதான். ஏடிபி போன்ற டபிள்யூடிஏ தர வரிசைப்பட்டியலில் முதல் 3 இடங்களில் அரீனா சபலென்கா (பெலாரஸ்), கோகோ காஃப், ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) ஆகியோர் தொடர்கின்றனர். இந்த வார தரவரிசையில் சாதனை படைத்துள்ள டாட்ஜனாவுக்கு அவரது கணவர் சார்லஸ் மரியா, ஷெல்டனுக்கு அவரது தந்தை பிரய்ன் ஷெல்டன் என குடும்பத்தினரே பயிற்சியாளராக உள்ளனர். இதில் டாட்ஜனா 2 குழந்தைகளின் தாய்.
The post உலக டென்னிஸ் தரவரிசை நம்பர் 1 சின்னர் சபலென்கா appeared first on Dinakaran.