பெங்களூரு: பெங்களூரு ஜெயநகரில் நகைக்கடை ஒன்றில் பணிபுரியும் பெண் ஸ்ரேயா என்பவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் ரேபிடோ டாக்ஸி புக் செய்து பயணித்துள்ளார். அப்போது பைக் ஓட்டுநர் தாறுமாறாக வண்டியை ஓட்டியதால் பெண் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த டிரைவர் பாதி வழியிலேயே இறங்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண், பணம் தர மறுத்து, ஹெல்மெட்டையும் திருப்பித் தர மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இறுதியில், அந்த பெண்ணை டிரைவர் அறைந்துள்ளார். இதில், நிலைதடுமாறி அவர் தரையில் விழுந்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இது குறித்து அந்தப் பெண் ஜெயநகர் காவல் நிலையத்திற்குச் சென்று தகவல் தெரிவித்தார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானவுடன், ஸ்ரேயாவைத் தாக்கிய டாக்ஸி ஓட்டுநர் சுஹாஸ் பதிலளித்தார், அந்த இளம் பெண் முதலில் தன்னை மோசமான வார்த்தைகளால் திட்டி, தன்னைத் தாக்கியதாகக் கூறினார். நடுரோட்டில் நிறுத்தச் சொன்னார். பின்னர், என்னை டிபன் பாக்ஸால் அடித்தார். கோபத்தில் திருப்பி அடித்ததாக அவர் தெரிவித்தார்.
The post தாறுமாறாக சென்றதை தட்டிக்கேட்டதால் இளம்பெண்ணை தாக்கிய ரேபிடோ பைக் ஓட்டுநர்: பெங்களூருவில் பரபரப்பு appeared first on Dinakaran.