சபரிமலையில் பக்தர், ஊழியர் பலி

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு தற்போது ஆனி மாத பூஜைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று சபரிமலைக்கு தரிசனத்திற்கு வந்த ஒரு பக்தர் மற்றும் தேவசம் போர்டு ஊழியர் ஆகியோர் மாரடைப்பால் மரணமடைந்தனர். கர்நாடக மாநிலம் ராமநகர் பகுதியைச் சேர்ந்த பிரஜ்வல் (20) என்ற பக்தர் நேற்று காலை பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.வழியில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு பலியானார். கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த தேவசம் போர்டு தற்காலிக ஊழியரான கோபகுமார் (60) நேற்று பணி முடிந்து மரக்கூட்டம் பகுதியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

The post சபரிமலையில் பக்தர், ஊழியர் பலி appeared first on Dinakaran.

Related Stories: