சோன்பத்ரா: கடவுள் ராமர் குறித்து சமூக வலைதளத்தில் ஆட்சேபகரமாக கருத்து பதிவிட்ட உபி வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். உபி மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தை சேர்ந்தவர் சூரஜ் ஜாதவ்(22). இவர் கடவுள் ராமர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து அவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இதுகுறித்து ஓப்ரா நகர போலீஸ் அதிகாரி ஹர்ஷ் பாண்டே கூறுகையில், ‘‘வாலிபர் சூரஜ் வெளியிட்ட வீடியோ, கடவுள் ராமர் மற்றும் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாக இருந்தது. இதுகுறித்து நேற்று முன்தினம் புகார் வந்தது. இதையடுத்து சூரஜ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 196ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது’’ என்றார்.
The post ராமர் பற்றி இன்ஸ்டாவில் சர்ச்சை கருத்து: உபி வாலிபர் கைது appeared first on Dinakaran.