இந்நிலையில், இருநாட்டு உறவின் அடையாளமாக சைப்ரஸ் நாட்டின் உயரிய ’கிராண்ட் க்ராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மகாரியோஸ் III’ விருதை அந்நாட்டின் அதிபர் கிறிஸ்டோடெளலிடிஸ், பிரதமர் மோடிக்கு வழங்கி கெளரவித்தார். பின்னர் பிரதமர் மோடி கூறியதாவது; கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் மாகாரியோஸ் III விருதுக்காக, சைப்ரஸ் அரசுக்கும், சைப்ரஸ் மக்களுக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது நரேந்திர மோடிக்கு மட்டுமல்ல, 140 கோடி இந்தியர்களுக்கும் மரியாதை ஆகும். இந்தியாவிற்கும், சைப்ரஸ் நாட்டிற்கும் இடையே நல்ல உறவுகள் உள்ளது. இந்த விருதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்பணிக்கிறேன். அனைத்து இந்தியர்களின் சார்பாக, இந்த கவுரவத்தை மிகுந்த பணிவுடனும், நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன்” என்றார்.
இதை தொடர்ந்து சைப்ரஸ் பயணத்தை இன்று முடித்துவிட்டு, அங்கிருந்து கனடாவுக்கு செல்லும் பிரதமர் மோடி, கனனாஸ்கிஸ் நகரில் ‘ஜி7’ உச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றவுள்ளாா். பின்னா், குரோஷியாவில் ஜூன் 18-இல் பயணம் மேற்கொண்டு, அந்நாட்டின் அதிபா் ஸோரன் மிலனோவிச், பிரதமா் ஆண்ட்ரேஜ் பிலென்கோவிச் ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளாா். இதன்மூலம் குரோஷியாவுக்கு பயணிக்கும் முதல் இந்திய பிரதமா் என்ற பெருமை மோடிக்கு சொந்தமாகவுள்ளது.
The post பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது: 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிப்பதார்! appeared first on Dinakaran.