லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஐதராபாத்: ஜெர்மனியின் பிராங்பேர்ட் விமான நிலையத்தில் இருந்து லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமானம் நேற்று மாலை ஐதராபாத் ராஜிவ் காந்தி விமான நிலையத்துக்கு புறப்பட்டது. அந்த விமானம், இன்று காலை ஐதராபாத் வந்து சேர வேண்டும். ஆனால் அந்த விமானம், மீண்டும் பிராங்பேர்ட் விமான நிலையத்துக்கே திருப்பி விடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐதராபாத் விமான நிலையம் வெளியிட்ட அறிக்கையில், ‘விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்ததால் ஜெர்மனிக்கு திருப்பி விடப்பட்டது.

விமானத்துக்கு மிரட்டல் வந்தபோது, இந்திய வான்வெளிக்கு வெளியேதான் விமானம் வந்து கொண்டிருந்தது. மீண்டும் ஜெர்மனிக்கோ அல்லது அருகிலிருக்கும் விமான நிலையத்தை தொடர்புகொண்டு அவசர தரையிறக்கத்தை மேற்கொள்ளவோ அறிவுறுத்தப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக லுப்தான்சா ஏர்லைன்ஸ் விடுத்துள்ள அறிக்கையில், ஐதராபாத்தில் தரையிறங்க அனுமதி கிடைக்காததால் மீண்டும் ஜெர்மனிக்கு விமானம் திரும்பியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

The post லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Related Stories: