இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான ராணுவ மோதல் நான்காவது நாளாக தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரக கிளை மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலால் சில சிறிய சேதங்கள் ஏற்பட்டதாக இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் உறுதிப்படுத்தியுள்ளார்.
நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரையிலும், இஸ்ரேலும் ஈரானும் மாறி மாறி ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் ஏவி தாக்குதல் நடத்திவருகின்றனர். இந்த சூழலில்தான் டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரக கிளையையும் ஈரான் ஏவுகணை தாக்கியுள்ளது. இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதர் மைக் ஹக்கபீ, இந்தத் தாக்குதலில் தூதரக கிளைக்கு அருகே சில சிறிய சேதங்கள் ஏற்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவத்திற்கு ஒரு நாள் முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தார். அமெரிக்க சொத்துகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அமெரிக்க ஆயுதப் படைகளின் முழு வலிமையையும் பயன்படுத்த நேரிடும் என்று கூறினார்.
The post ஈரானின் பதிலடித் தாக்குதலில் இஸ்ரேல் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகம் சேதம் appeared first on Dinakaran.