அண்ணா ஆட்சியில் சீர்திருத்த திருமண சட்டம்.. நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!!

தஞ்சை: உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தஞ்சாவூர் வருகை தந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள முதல்வர் மருந்தகத்தை திடீரென பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து தஞ்சையில் திமுக எம்.எல்.ஏ. துரை.சந்திரசேகரன் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் வீரவிஜயன் – தனுஸ்ரீ இணையர் திருமணத்தை நடத்தி வைத்தார். திருமண விழாவில் முதல்வர் வாழ்த்துரையாற்றினார். அப்போது பேசிய அவர்;

அண்ணா ஆட்சியில் சீர்திருத்த திருமண சட்டம்: முதல்வர்
1967க்கு முன் சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லாது. அண்ணா ஆட்சிக்கு வந்தப் பிறகு சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லும் என தீர்மானம் நிறைவேற்றினார். நாட்டிலேயே முதன்முறையாக சுயமரியாதை திருமணங்களை அங்கீகரித்து சட்டமாக்கியது தமிழ்நாடுதான். உச்சநீதிமன்றத்திலும்,

நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும். நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும் என்பது நமது நீண்டநாள் கோரிக்கை. தமிழுக்கு செம்மொழி என்ற பெருமையை தேடி தந்தவர் கலைஞர். குழந்தைகளுக்கு தமிழில் பெயரை சூட்ட வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

The post அண்ணா ஆட்சியில் சீர்திருத்த திருமண சட்டம்.. நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!! appeared first on Dinakaran.

Related Stories: