இந்த சம்பவம் தொடர்பாக க.க.சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து மாவட்ட காவல்க்கண்காணிப்பாளர் கார்த்திக்கேயன் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர். கோவை கேரளா எல்லைப்பகுதியில் இருக்கூடிய சிசிடிவி கேமரா பதிவுகளை சேகரித்து ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதன் அடிப்படையில் கடத்தல்காரர்கள் உபயோகித்த லாரி கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும் கேரளாவில் முகாமிட்ட தனிபடைபோலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில், கேரளா மாநிலம் வழுக்கல் பகுதியில் நடைக்கடை உரிமையாளரின் கார் கண்டுபிடிக்கப்பட்டது. நகைகளை கொள்ளையடித்தவர்கள் வேறு வேறு வாகனங்களில் மாறி அங்கிருந்து தப்பியிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்றூவருகிறது.
The post கேரளா எல்லையில் 1.25 கிலோ தங்கம் கொள்ளை: நகைக் கடை உரிமையாளர் கார் கேரளாவில் மீட்பு appeared first on Dinakaran.