ஈரோடு, ஜூன் 16: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. சூரம்பட்டி நால்ரோட்டில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு கட்சியின் வட்டாரச்செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். முன்னாள் தேசிய செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர் ரவி, மாவட்டச் செயலாளர் பிரபாகரன், விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் துளசிமணி, மாவட்ட துணைச்செயலாளர் சின்னசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்து பேசினர்.
கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழுத் தலைவரும், திருப்பூர் எம்.பி.யுமான சுப்பராயன், கட்சியின் நூறாண்டு வரலாறு மற்றும் செயல்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திரளானோர் கலந்துகொண்டனர்.
The post இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.