தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான் அதிமுகவை சீண்டும் பாஜ தலைவர்

திண்டுக்கல்: திண்டுக்கல் பாஜ அலுவலகத்தில் நேற்று நடந்த விழாவில் மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: 2026 தேர்தலில் அதிமுக தவிர பாமக, தேமுதிக, அமமுக மற்றும் சிறிய கட்சிகள் பாஜவுடன் கூட்டணி அமைக்கும். அதிமுக ஆட்சி அமைத்தாலும் அதனை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு என்றுதான் கூறுவோம். விஜய் கண்டிப்பாக கூட்டணிக்கு வர மாட்டார்.

ஒரு நடிகர் கட்சி ஆரம்பித்து உடனடியாக கூட்டணி என கூறினால் அவரது கட்சி காலி ஆகிவிடும். சிரஞ்சீவி, விஜயகாந்த் போன்றவர்கள் தனித்தே தேர்தலை சந்தித்தனர். ரசிகர்கள் விஜய்யை முதலமைச்சராக்க வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால் விஜய், எடப்பாடியை முதலமைச்சராக்குவோம், பாஜவை ஆட்சி கட்டிலில் உட்கார வைப்போம் என பிரசாரம் செய்தால் அவரது அடிப்படை காலியாகி விடும். அதிமுகவை அமித்ஷா நடத்தவில்லை. எங்களைத்தான் அவர் நடத்துகிறார். இவ்வாறு தெரிவித்தார்.

The post தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான் அதிமுகவை சீண்டும் பாஜ தலைவர் appeared first on Dinakaran.

Related Stories: