புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று முன்தினம் காலை சென்னை முகப்பேர் வீட்டில் இருந்து மின்ட் ரமேஷை விசாரணைக்காக அம்பத்தூர் அலுவலகம் அழைத்து சென்றனர். அவரது வீடு, அலுவலகம் உள்பட 9 இடங்களில் சோதனை நடந்தது.
இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. அங்கு கிடைத்த ஆவணங்களை சோதனை செய்து, சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் அவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர், புத்தகரத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக புகார் எழுந்த இடத்தில் வைத்து விசாரித்ததை தொடர்ந்து, மின்ட் ரமேஷ் புழல் காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு அங்கு தீவிர விசாரணை நடத்தினர்.
இதில், புத்தரகம் பகுதியில் வேணு என்பவரின் நிலத்தை, பாஜ நெசவாளர் அணி நிர்வாகியான மினட் ரமேஷ் அபகரித்தது உறுதியானதை அடுத்து, நேற்று அவரை மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் தொழில் அதிபர்களை மிரட்டிய ரவுடி மிளகாய் பொடி வெங்கடேஷ் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது, மின்ட் ரமேஷ் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post நில மோசடி புகாரில் பாஜ நெசவாளர் அணி நிர்வாகி மின்ட் ரமேஷ் கைது appeared first on Dinakaran.