எழுத்தறிவு பெறும் திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை: எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து பயின்ற 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்று, 100 விழுக்காட்டோடு இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தை பெற்றுள்ளது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாத 15+ வயதினர் அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து பயின்ற 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

100% தேர்ச்சி விழுக்காட்டோடு தமிழ்நாடு இந்தியாவிலேயே ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்துள்ளது. அறிவொளி ஏற்றும் இச்சாதனைக்கு உழைத்த பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக பணியாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

The post எழுத்தறிவு பெறும் திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: