650 அடி உயரத்தை எட்டியதும் விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது : ஒன்றிய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பேட்டி

டெல்லி : அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு விளக்கம் அளித்துள்ளார். அதில், “650 அடி உயரத்தை எட்டியதும் விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. கருப்புப் பெட்டியில் உள்ள தகவல்கள் மூலம் விமான விபத்துக்கான உண்மையான காரணம் தெரிய வரும்.விமான விபத்து தொடர்பான உயர்மட்டக் குழுவின் விசாரணையை 3 மாதங்களில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விமான விபத்துக்கான காரணத்தை கண்டறிய சர்வதேச நிபுணர்களின் உதவியும் கோரப்பட்டுள்ளது.போயிங் 787 ரக விமானங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.”இவ்வாறு தெரிவித்தார்.

The post 650 அடி உயரத்தை எட்டியதும் விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது : ஒன்றிய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: