இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் ஜூன் 19ல் விண்வெளிக்கு பயணம்

புளோரிடா: இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் ஜூன் 19ல் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்கின்றனர். இஸ்ரோ, நாசா மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக , சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் ஆக்சியம்-4 விண்கலம் கடந்த 11ம் தேதி விண்ணில் ஏவப்பட இருந்தது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் ஏவப்படவிருந்த இந்த பயணம், கடந்த 11ம் தேதி மாலை 5.30 மணிக்குப் புறப்படுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது.

தனியார் மனித விண்வெளிப் பயணத்தில், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மிஷன் கமாண்டர் பெக்கி விட்சன், ஹங்கேரியைச் சேர்ந்த விண்வெளி நிபுணர் திபோர் கபு, போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி என மொத்தம் நான்கு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திடீரென இந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஃபால்கன் 9 ராக்கெட்டில் திரவ ஆக்சிஜன் கசிவு பிரச்சனையால் விண்வெளி பயணம் ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டது. திரவ ஆக்சிஜன் கசிவு சரி செய்யப்பட்டதை அடுத்து ஜூன் 19ல் ஃபால்கன் 9 ராக்கெட் ஜூன் 19ல் ஏவப்படுகிறது.

The post இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் ஜூன் 19ல் விண்வெளிக்கு பயணம் appeared first on Dinakaran.

Related Stories: