பழம்பெரும் நடிகை கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் காலமானார்

சிவகங்கை: பழம்பெரும் நடிகை கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் (99) காலமானார். இவருக்கு வயது 98.‌ சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி பகுதியில் பிறந்தவர். இவர் ஆல் இந்தியா ரேடியோவில் சுமார் 30 வருடங்கள் பணிபுரிந்தார். பாண்டியராஜனின் ஆண்பாவம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் கொல்லங்குடி கருப்பாயி அம்மாள். ஆயிசு நூறு, கோபால கோபாலா உள்ளிட்ட படங்களில் பாட்டி வேடங்களில் நடித்துள்ளார். தமிழ் நாட்டுப்புற இசையின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

பின்னர் வந்த பிற இசைக் கலைஞர்களுக்கு உதாரணமாகத் திகழ்ந்தார். பல திரைப்படங்களில் பாடல்களை பாடியுள்ள கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் கலைமாமணி விருது பெற்றவர். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக கொல்லங்குடி கருப்பாயி இன்று காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு தற்போது திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

The post பழம்பெரும் நடிகை கொல்லங்குடி கருப்பாயி அம்மாள் காலமானார் appeared first on Dinakaran.

Related Stories: