டெஹ்ரான்: இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடந்து வரும் மோதலில் ஹமாஸின் முக்கிய தளபதிகள் பலர் கொல்லப்பட்டனர். இதனிடையே, ஹமாஸுக்கு ஆதரவாக ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா உள்ளிட்ட அமைப்புகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திவந்தது. இந்த அமைப்புகளை குறிவைத்தும் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது. இதனிடையே ஈரானின் அணுசக்தி உற்பத்தியை கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக அமெரிக்க அரசு கடந்த சில நாட்களாக ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்த பேச்சுவார்த்தையில் இதுவரை உடன்பாடு எட்டப்படவில்லை.
இதையடுத்து எந்த நேரத்திலும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் எனக் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஏவுகணை உற்பத்தி தளம், அணுசக்தி நிலையங்களை குறிவைத்து நேற்று இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை தொடங்கியது. இதில் ஈரானின் முக்கிய அணு விஞ்ஞானிகள், ராணுவ தளபதிகள் பலியாகினர். பதிலடியாக ஈரானும் 100 டிரோன்கள் மூலம் தாக்குதலை தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஈரான் மீது 2வது நாளாக இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானில் உள்ள அணுசக்தி மையம், ராணுவ நிலைகளை குறி வைத்து இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் தாக்குதலை அடுத்து தலைநகர் தெஹ்ரானில் வான் பாதுகாப்பு அமைப்புகளை ஈரான் நிறுத்தியுள்ளது.
இஸ்ரேல் விமானப்படை தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. ஈரான் மீது இஸ்ரேல் விமானப் படை தாக்குதலில் ராணுவ தளபதிகள், அணு விஞ்ஞானிகள் உள்பட 78 பேர் உயிரிழந்ததாக ஐ.நா. தூதர் தகவல் தெரிவித்துள்ளார். தாக்குதலில் ஈரானின் 3 முக்கிய படைத் தளபதிகள், அணுசக்தி விஞ்ஞானிகள் உள்ளிட்டவர்கள் உயிரிழந்தனர். இஸ்ரேல் தாக்குதலில் 320 பேர் காயம் அடைந்துள்ளனர். இஸ்ரேலில் ஜெருசலேம் உள்ளிட்ட இடங்களில் ஈரான் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். 50 பேர் காயம் என தகவல் வெளியாகியுள்ளது.
The post ஈரான் மீது இஸ்ரேல் விமானப் படை தாக்குதல்: பற்றி எரியும் மத்திய கிழக்கு.. 78 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.