மூணாறு, ஜூன் 14: கேரளா மாநிலம் மூணாறு அருகே மாங்குளம் சுற்றுலா பகுதி உள்ளது. இங்கு ஏராளமான நீர்வீழ்ச்சிகளும் மலைக்குன்றுகளும் உள்ளது. மேலும் இங்குள்ள யானைகுளம் சுற்றுலா பயணிகள் இடையே பிரபலமான ஒன்றாகும். இதனால் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மலை பாதைகள் மற்றும் ஆற்றில் ஜீப்பில் சாகச பயணம் மேற்கொள்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று முன் தினம் தமிழகத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குழு மூணாறுக்கு சுற்றுலா வந்துள்ளனர். இவர்கள் மூணாறு சுற்றிக் கொண்டு விட்டு ஜீப்பில் மாலை 4 மணியளவில் மாங்குளம் சென்றுள்ளனர். இதனிடையே அங்குள்ள பெரும்பன்குத்து நீர்வீழ்ச்சி அருகே உள்ள ஆற்றில் சுற்றுலா பயணிகள் சாகச பயணம் செய்வதற்கிடையே ஜீப் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. இதனை கண்ட அப்பகுதியினர் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகனம் உட்பட்ட ஓட்டுநரை பத்திரமாக மீட்டனர்.
The post மூணாறு அருகே வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலா ஜீப் appeared first on Dinakaran.