கூடலூர், ஜூன் 14: கேரள மாநிலம் கொக்கையார், போய்ஸ் சுப்பிரமணிய கோயிலில் கடந்த மே 29 அன்று கோயில் உண்டியலை உடைத்து அதிலிருந்து பணம் மற்றும் சாமி சிலையில் இருந்த தங்க நகை ஆகியவை கொள்ளைபோனது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் மாநிலத்தில் பல்வேறு கோவில்களில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்திற்கும் இதற்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்தத் தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது உத்தமபாளையத்தை சேர்ந்த சரவண பாண்டியன் (எ)ராமகிருஷ்ணனை கேரளா போலீசார் கைது செய்தனர்.
The post கோயில்களில் கொள்ளையடித்தவர் கைது appeared first on Dinakaran.