அரசு பாலிடெக்னிக்கில் நேரடி மாணவர் சேர்க்கை

 

மதுரை, ஜூன் 14: மதுரை, தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி தன்னாட்சி அந்தஸ்துடன் செயல்பட்டு வருகிறது. இங்கு சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் கம்ப்யூட்டர், பிளாஸ்டிக், பாலிமர், வெப் டிசைனிங், லாஜிஸ்டிகஸ் போன்ற முழுநேர டிப்ளமோ வகுப்புகள் நடத்தப்படுகிறது. இக்கல்லூரியில் 2025-26ம் கல்வியாண்டில் முதலாமாண்டு காலியிடங்களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இதன்படி, முதல் ஷிப்டில் 24 இடமும், இரண்டாம் ஷிப்டில் 13 இடங்களும் காலியாக உள்ளன. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் அசல் கல்வி சான்றுகளுடன் நேரில் வந்து பயிற்சியில் சேரலாம். பணிபுரிவோருக்கு வசதியாக மாலை நேரத்தில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் ஆகிய பாடப்பிரிவுகளில் பகுதி நேர டிப்ளமோ வகுப்புகளாக சேர்க்கையும் நடக்கிறது. இதுகுறித்த விபரங்களுக்கு 0452-2673631 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அரசு பாலிடெக்னிக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

The post அரசு பாலிடெக்னிக்கில் நேரடி மாணவர் சேர்க்கை appeared first on Dinakaran.

Related Stories: