திருவையாறில் நுண்ணீர் பாசன திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறலாம்

 

திருவையாறு, ஜூன் 14: திருவையாறு வட்டாரத்திற்கு பிரதமமந்திரியின் நுண்ணீர் பாசன திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறலாம் தோட்டக்கலை உதவி இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து திருவையாறு தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் வினோதா கூறியதாவது: பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனம் 2025-26-ம் ஆண்டு திட்டத்தின் கீழ் சொட்டுநீர் பாசனம் அமைத்து கொடுப்பதற்கு தோட்டக்கலை துறைக்கு நடப்பாண்டில் திருவையாறு வட்டாரத்திற்கு ரூ.20.2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

சொட்டு நீர் பாசனம் அமைப்பதன் மூலம் நிலத்தடிநீர் பாதுகாக்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், கணினி சிட்டா, அடங்கல், போட்டோ, ஆதார்நகல், குடும்ப அட்டை நகல், நிலவரைபடம், சிறுகுறு விவசாயிகள் சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் திருவையாறு தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். எனவே, இந்த திட்டத்தை பயன்படுத்தி விவசாயிகள் அனைவரும் பயன்பெற வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post திருவையாறில் நுண்ணீர் பாசன திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறலாம் appeared first on Dinakaran.

Related Stories: