நெல் குவிண்டால் விலையை உயர்த்திய முதல்வர்

 

தஞ்சாவூர், ஜூன் 14: நெல் கு விண்டாலுக்கான தொகையை உயர்த்தி அறிவித்த முதலமைச்சருக்கு தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் நன்றி கூறினர்.தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் முகமது இப்ராஹிம், அறிக்கையில் கூறியதாவது: தமிழக டெல்டா மாவட்ட ங்களின் விவசாயிகள் நலன் மீது அக்கறை கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மேட்டூரில் காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டார்.

தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை அரியலூர், திருச்சி, கடலூர், சேலம், திருவாரூர் ஆகிய 10க்கும் மேற்பட்ட மாவட்ட விவசாயிகள் பல லட்சம் ஏக்கரில் குறுவை, சம்பா சாகுபடி செய்து நல்ல மகசூல் பெறுவார்கள். மேலும் சாதாரண நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 என்றும் சன்னரக நெல்லுக்கு ரூ. 2,545 உயர்த்தி இருப்பதும் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.  மேலும் வருகிற 15, 16 தேதிகளில் தஞ்சை மாவட்ட த்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் 15ம் தேதி கல்லணையில் இருந்தும் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட உள்ளார். இதற்கும் பாராட்டு களை தெரிவித்துக் கொள்கிறோம்.

The post நெல் குவிண்டால் விலையை உயர்த்திய முதல்வர் appeared first on Dinakaran.

Related Stories: