கறம்பக்குடி, ஜூன் 14: பல்லவராயன்பத்தை, ஆத்தியடி பட்டி சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், பல்லவராயன்பத்தை, ஆத்தியடி பட்டி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் கறம்பக்குடி புதுப்பட்டியில் இருந்து ஆத்தியடிப்பட்டி செல்லும் சாலை நீண்ட நாட்களாக பழுதடைந்து குண்டும் குழியுமாக ஜல்லிகள் பெயர்ந்து காணப்படுகின்றன. இதனால், அந்த பகுதியில் செல்வோர் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும், குறிப்பாக அந்த கிராமத்திலிருந்து கறம்பக்குடி, புதுக்கோட்டை, ஆலங்குடி, தஞ்சாவூர் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு அலுவலகத்திற்கும் கல்லூரிகளுக்கும் பள்ளிகளுக்கும் சென்று வருகின்றனர். இதன் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றனர். எனவே, பல்லவராயன் பத்தை ஊராட்சி, ஆத்தியடி பட்டி கிராமத்தில் நீண்ட நாட்களாக பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படும் தார் சாலையை சீரமைத்து புதிய தார் சாலை அமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் அனைத்து தரப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
The post ஆத்தியடிப்பட்டி சாலையை சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.