புதுக்கோட்டை, ஜூன் 14: புதுக்கோட்டை மாவட்டக் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு விவரம்: புதுக்கோட்டை மாவட்டக் காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 6 நான்கு சக்கர வாகனங்கள், 4 இரு சக்கர வாகனங்கள் வரும் ஜூன் 23ம் தேதி பொது ஏலம் விடப்பட உள்ளன.
மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற உள்ள இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர், ஜூன் 21ம் தேதி சனிக்கிழமை ஆயுதப்படை திடலில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை நேரில் பார்வையிடலாம். ஏலத்தில் பங்குபெற, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.2 ஆயிரமும், இரு சக்கர வாகனங்களுக்கு ரூ. ஆயிரமும் முன்பணமாக செலுத்தி டோக்கன் பெற வேண்டும். முன்பணம் செலுத்தி டோக்கன் பெறாதவர்கள் ஏலத்தில் பங்கேற்க முடியாது. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post காவல்துறையில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் வரும் 23-ல் ஏலம் appeared first on Dinakaran.