கிருஷ்ணராயபுரம், ஜூன் 14: கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூரில் சட்ட விரோதமாக 2 மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கிருஷ்ணராயபுரம் அருகே மணவாசி இந்திராகாலனியை சேர்ந்த ஆறுமுகம் (55) என்பவர் சட்ட விரோதமாக அரை யூனிட் ஆற்று மணலை மாட்டு வண்டியில் அள்ளிக்கொண்டு மாயனூர் இரட்டை வாய்க்கால் புது பாலம் பகுதியில் சென்றபோது போலீசார் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர்.
அதேபோல் கிருஷ்ணராயபுரம் அருகே குச்சிபட்டியை சேர்ந்த தனபால் (44) என்பவர் சட்ட விரோதமாக அரை யூனிட் ஆற்று மணலை மாட்டு வண்டியில் எடுத்துக்கொண்டு மாயனூர் பழைய போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் செல்லும்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த மாயனூர் போலீசார் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து தனபாலை கைது செய்தனர்.
The post கிருஷ்ணராயபுரம் அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்திய 2 பேர் கைது appeared first on Dinakaran.