வேட்புமனுவில் தவறான தகவல் பதிவிட்டதாக புகார் வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மனு: தேர்தல் ஆணையம் பதில்தர உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் கே.சி.வீரமணி போட்டியிட்டார். அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில், தவறான சொத்து விவரங்களை தெரிவித்ததாக வேலூரைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். திருப்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கே.சி.வீரமணிக்கு எதிராக தேர்தல் ஆணையம் வழக்கு தொடர்ந்தது.

இதை ரத்து செய்யக் கோரி கே.சி.வீரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.இதை விசாரித்த உயர் நீதிமன்றம், திருப்பத்தூர் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க கோரி விசாரணையை ஜூலை 9க்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

The post வேட்புமனுவில் தவறான தகவல் பதிவிட்டதாக புகார் வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மனு: தேர்தல் ஆணையம் பதில்தர உயர் நீதிமன்றம் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: