ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் 1910 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் ஜூலை 12ம் தேதி கடைசி நாள்

சென்னை: டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தரராஜ் வெளியிட்ட அறிவிப்பு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் தொழில்நுட்ப உதவியாளர் (மின்னியல்) உள்ளிட்ட 58 பதவிகளுக்கான 1910 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (பட்டயம், தொழிற்பயிற்சி நிலை)க்கான அறிவிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 12ம் தேதி வரை இணையவழியில் (www.tnpsc.gov.in, www.tnpscexams.in) விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

ஓஎம்ஆர்/ கணினி வழித் தேர்வு முறையில் 31.8.2025, 7.9.25 மற்றும் 15.9.25 வரை நடைபெறும். ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (பட்டயம் தொழிற்பயிற்சி நிலை) 2024ம் ஆண்டு அறிவிக்கையில் இரண்டு நிதியாண்டுகளுக்கான 2022 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதாவது, ஒரு நிதியாண்டிற்கு சராசரியாக 1011 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

2024ம் ஆண்டிற்கான அறிவிக்கையோடு ஒப்பிடும் போது 2025ம் ஆண்டு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (பட்டயம் தொழிற்பயிற்சி நிலை) மூலம் ஒரு நிதியாண்டிற்கு (2025-26) 1910 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும், 2025ம் ஆண்டு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை, அரசுத் துறை, நிறுவனங்களிடமிருந்து அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்விற்கு முன்பாக மேலும் அதிகரிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் 1910 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் ஜூலை 12ம் தேதி கடைசி நாள் appeared first on Dinakaran.

Related Stories: