மாணவர்களுக்கு பாட உபகரணங்கள் திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில்

வந்தவாசி, ஜூன் 14: திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழாவையொட்டி நேற்று தெள்ளாரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம், பேனா மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தெள்ளார் ஒன்றிய செயலாளர் ராதா தலைமை தாங்கினார். முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ராமு, தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கோபிநாதன், மாவட்ட பிரதிநிதிகள் ராமலிங்கம், முத்துக்குமரன், நகர செயலாளர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை தலைவர் விநாயகமூர்த்தி வரவேற்றார். இதில் மாணவரணி மாவட்ட அமைப்பாளர் இஎஸ்டி கார்த்திகேயன் கலந்துகொண்டு 400 மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் பேனா மற்றும் இனிப்பு வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் தேசூர் நகரச் செயலாளர் மோகன், ஒன்றிய அவைத் தலைவர் பழனிச்சாமி, இளைஞர் அணி ஒன்றிய அமைப்பாளர் முருகன், துணை அமைப்பாளர் சுரேஷ்குமார், நிர்வாகிகள் டெய்லர் மோகன், சிவராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மாணவர்களுக்கு பாட உபகரணங்கள் திமுக சுற்றுச்சூழல் அணி சார்பில் appeared first on Dinakaran.

Related Stories: