தம்பதியை கட்டையால் சரமாரி தாக்குதல் தொழிலாளி கைது செய்யாறு அருகே நிலத்தகராறு

செய்யாறு, ஜூன் 14: செய்யாறு அருகே ஏற்பட்ட நிலத்தகராறில் தம்பதியை கட்டையால் சரமாரி தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த சுமங்கலி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபால்(45), விவசாயி. இவரது மனைவி மீனாட்சி(40), சிப்காட்டில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். ஜெயபாலின் அண்ணன் மகேந்திரன்(50), சென்ட்ரிங் தொழிலாளி. ஜெயபாலுக்கும், மகேந்திரனுக்கும் சொந்தமான நிலம் முழுவதையும் மகேந்திரனே அனுபவித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த 11ம் தேதி ஜெயபால், மீனாட்சி இருவரும் மகேந்திரனிடம் சென்று, எங்களுக்கு சொந்தமான நிலத்தின் பாகத்தையும் நீங்களே அனுபவித்து வருகிறீர்கள். அதில் எங்களுக்கு பங்கு கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அதற்கான பணத்தை கொடுக்க வேண்டும்’ எனக்கேட்டுள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மகேந்திரன், உங்களால்தான், தங்ைகயின் கணவர், எனது வீட்டில் இருந்த டிராக்டரை எடுத்துச் சென்றுவிட்டார். இதற்கு நீங்கள்தான் காரணம்’ எனக்கூறி ஜெயபால், மீனாட்சியை, கட்டையால் சரமாரியாக தாக்கினாராம். இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து மீனாட்சி மோரணம் போலீசில் நேற்றுமுன்தினம் புகார் கொடுத்தார். அதன்பேரில் எஸ்ஐ ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை கைது ெசய்து விசாரித்து வருகிறார்.

The post தம்பதியை கட்டையால் சரமாரி தாக்குதல் தொழிலாளி கைது செய்யாறு அருகே நிலத்தகராறு appeared first on Dinakaran.

Related Stories: