மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கேமராக்களை அதிகரிக்க வேண்டும் எஸ்பி மதிவாணன் அறிவுறுத்தல் மாதாந்திர குற்றத்தடுப்பு கலந்தாய்வு கூட்டம்

வேலூர், ஜூன் 14: வேலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்திப்புகளில் சிசிடிவி ேகமராக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று எஸ்பி அலுவலகத்தில் நடந்த குற்றத்தடுப்பு கலந்தாய்வு கூட்டத்தில் எஸ்பி மதிவாணன் அறிவுறுத்தினார். வேலூர் எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி மதிவாணன் தலைமையில் மாதாந்திர குற்றத்தடுப்பு கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கடந்த மாதம் முழுவதும் நடந்த குற்றங்கள் தொடர்பாக விரைந்து வழக்குகளை முடிக்க வேண்டும், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கப்பட வேண்டும். சரித்திர பதிவேடு குற்றவாளிகள், வழக்கமான குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணல் திருட்டு, லாட்டரி, காட்டன் சூதாட்டம், கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற குற்றங்களை முழுமையாக தடுக்க குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். மாவட்டத்தில் மதுவிலக்கு சோதனை அடிக்கடி நடத்தப்பட்டு குற்றங்கள் தடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை தடுக்க மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் அருகில் உள்ள கடைகளில் அவ்வபோது சோதனைகள் நடத்த வேண்டும். இதுதொடர்பான விழிப்புணர்வை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.

மாவட்டம் முழுவதும் வாகன தணிக்கையை தீவிரப்படுத்துவதுடன், பொதுமக்கள் அதிகம் கூடும் சந்திப்புகளில் சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். ஏடிஎம் மையங்கள், நகைக்கடைகள் அமைந்துள்ள பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதுடன், பகல், இரவு ரோந்துப்பணியை தீவிரப்படுத்த வேண்டும். மேலும் சாலை விதிகளை மீறுவோர், சைபர் குற்றங்கள், பெண்கள் மற்றும குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், எஸ்சி எஸ்டி வன்கொடுமை வழக்குகள் குறித்தும்தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பொதுமக்களிடம் பெறப்படும் புகார்கள் மீது உடனுக்குடன் சிஎஸ்ஆர், எப்ஐஆர் பதிவு செய்யப்பட வேண்டும் என்பது போன்ற அறிவுறுத்தல்களை எஸ்பி மதிவாணன் வழங்கினார். கூட்டத்தில், ஏடிஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், சிறைத்துறை அதிகாரிகள், சிறார் நீதிகுழும அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள், டாக்டர்கள், துணை அரசு வழக்கறிஞர்கள், மாநகராட்சி அதிகாரிகள், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கேமராக்களை அதிகரிக்க வேண்டும் எஸ்பி மதிவாணன் அறிவுறுத்தல் மாதாந்திர குற்றத்தடுப்பு கலந்தாய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: